ட்ரம்பின் தடை தொடர்பில் யேமனியர்கள் அதிருப்தி
குறித்த தடை தொடர்பில் கருத்து தெரிவித்த யேமனின் புகழ்பெற்ற ஓவியர் முராட் சப்பே (Murad Subay), “இந்த தடை காரணமாக அமெரிக்காவில் உள்ள எனது மனைவியை சந்திக்க இயலாத நிலைமை தோன்றியுள்ளது. எனது மனைவி தற்போது அமெரிக்காவில் கல்வி கற்று வருகின்றார். குறித்த தடை அகற்றப்படும் வரை என்னால் அவரை சந்திக்க இயலாது. இந்த தடைக்கு அமெரிக்கர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” என தெரிவித்தார்.